Thursday, August 11, 2011

யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?

6






சோழர் காலம்
தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

சான்றுகள்
கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.

கல்வெட்டுகள்
சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.
மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.
அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன.

நினைவுச் சின்னங்கள்:
சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும்.

நாணயங்கள்:
சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன.

இலக்கியம்:
சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாக உள்ளன.

அயல்நாட்டு சான்றுகள்:
சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது. ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.

பிற்கால சோழ அரச குலம்:
பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியவர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி கி.மு. 850 ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்வல மன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டார். சிவ பக்தரான இவர் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்.

முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:
உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. இவர் ஆதித்யனின் மகனாவார். இவர் டிதன் இந்தியாவின் பல பகுதிகளை வென்று தனது நாட்டுடன் இணைந்து தமது பேரரசின் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாக இவருக்கு ‘மதுரை கொண்டான்’ என்ற பட்டடம் வழங்கப்ப்டடது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்ததால் இவர் ‘மதுரையும் ஈழமும் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார்.

இவர் ஒரு சிவபக்தர். இவர் சிதம்பத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்” என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராம நிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது. பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தியன். அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் அரசாண்டனர்.

முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014
இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவலாங்காடு செப்பேடுகள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் மிக வலிமை மிக்க மன்னராவார். முதலாம் இராஸராஸ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இவர் காலத்தில் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன. இராஜராஜனிடம் வலிமை மிக்க ராணுவம் இருந்தது. இவர் சேரரின் ராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தை சார்ந்த பாஸ்கர ரவி எ்னற மன்னனையும் தோற்கடித்து, ‘காந்தளூர் சாலை கலமருதளிய’ என்ற பட்டம் பெற்றார். இவர் அமரபுஜங்கன என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று 
மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவர் மைசூர் பகுதியில் உள்ள கங்கபடி, தடிகை பாடி, நொளம்ப்பாடி ஆகியவற்றை வென்றார். இவர் விளிங்ஞம் என்ற பகுதியை வென்று ‘திக் விஜயம்’ நடத்தினார். மாலத் தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு. இராஜராஜ சோழனுக்கு அவரது மகன் பட்டத்து இளவரசான ராஜேந்திரன் ஆட்சி மற்றும் போர்ப்பணிகளில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.
இராஜராஜ சோழன் ஒரு சிறந்த நிர்வாகி, தமது ஆட்சி காலத்தில் இவர் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளாட்சி நிர்வாக முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார். இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் புத்தஆலயம் கட்டட அனுமதி அளித்ததோடு ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044:
முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் பதிவ ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.
தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.


இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றினார். பின்னர் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குல அரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார். முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன் ஆகிய அரசர்கள் சில வருடங்கள் சோழ நாட்டை ஆட்சி செய்தனர்.

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:
சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார். குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையான நில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.
மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன.

சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.

6 comments:

Kallar said...

கள்வெட்டு ஆதாரம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-

"கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"

"கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"

கொங்கரையர் பட்டம் கள்ளர்களுக்கு மட்டும் தான் இருக்கிறத மேலும் அதில் உள்ள பள்ளி என்பது இடத்தை குறிக்கும் சாதியை அல்ல.
&&&& &&&&&&& &&&&

இடம் : தருமபுரி
ஊர் : மூக்கனூர்
தொடர் எண் : 115/1974
வரலாறு ஆண்டு : 10ஆம், 11ம் நூற்றாண்டு

ஸ்ரீ கள்ள சோழன் ராஜநன்

Kallar said...


🌹 கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்ட அரசர்கள் :

1) சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் " கள்வர் கோமான்"

2) " கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் செந்தலைக் கல்வெட்டு" திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு “வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.

3) “ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

4)“ கள்வர் பெருமகன் – தென்னன்”

" கள்வர் கோமான் தென்னவன்”
என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்

5) "இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது நெஞ்ச நிறையழித்த கள்வனென்" என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்

6) "மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்” (சுந்தரர் திருத்தொண்டர்தொகை)

7) "கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)

8) "களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்

9) “ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)

10) மாஅல்யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடம்” என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

11) சீவக சிந்தாமணி 741ம் செய்யுளில் உள்ள

“ கள்ளராற் புலியை வேறுகாணிய ” என்ற

தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின் இங்கு வீரத்தின் மேம்பட்டார் என்று பொருள் படுகிறது. எனவே வீரம் எனும் பொருள் பற்றியே கள்வர், கள்ளர் என்ற பெயர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.

இதில் இருந்து சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
(குறிப்பு : எந்த மன்னர்களும எந்தக் குறிப்பிட்ட சாதியையும் சேர்ந்தவர்கள் இல்லை எல்லாம் இன கலப்பு தான் ).

கள்ளர் குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.

🌹 குறிப்புகள் -1 : அறிஞர்கள் கள்ளர்களை பற்கூரிய கருத்துக்கள்

1) முடியுடை மூவேந்தருள் சோழர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

2) மு. சீனுவாச அய்யங்கார் சோழரை சாதியில் கள்ளர் என்றும் பாண்டியரை மறவர் என்றும் குறிப்பார்.

3) வின்சன் ஸ்மித் எனும் வரலாற்று அறிஞர் கள்ளரையும், பல்லவரையும் இணைத்துக் கூறுவார்.

4) சர்.வால்டர் எலியட் கள்ளர்கள்களை கலகத் கூட்டத்தார் என்றும் அவர்கள் ஆண்மை, அஞ்சாமை, வீரம் முதலிய பண்பு மிக்கவர்கள் என்பார்.

5) கள்ளர்கள் நாகர் இனத்தவர்என்று அறிஞர் வி. கனகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.

6) கள்ளர்கள் தமிழகத்தின் வீரமிக்க தனித்தமிழ்த் தொல் குடியினர் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறுவார்.

7) "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடியினர் " என்று வழக்கறிஞர் சுந்தரராசன் கூறுவார்.
மேலும் கல்லில் தோன்றியதால் கல்லர் என்று குறிப்பதே சிறப்பு என்பார் தமது தரணியாண்ட தமிழ் வள்ளல்கள் என்ற நூலில்.

Kallar said...


800 வருடங்களாக நாயக்கர்களுக்கும் மற்றும் வெள்ளையர்களுக்கும் கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்தவர்கள் மன்னர் பரம்பரையா மற்றும் சத்திரியனா? இங்கு முக்குலத்தோர் மட்டுமே மன்னர் இனம் என்று சொல்வதற்கு ஏற்றார் போல் வாழ்ந்த இனம், (சேர சோழ பாண்டிய பல்லவ அரசுகள் வேண்டுமானால் முக்குலத்தோர் வீரத்தை கண்டு இவர்கள் தங்கள் வாரிசுகள் என்று உரிமை கூறலாம்) மேலும் முக்குலத்தோர் விஜயநகர பிரதிநிதிகள் என்றால் இவர்கள் மற்ற மாநிலத்திலோ மற்ற நாட்டிலோ (இலங்கையை தவிர) கூட இல்லை ஆனால் மற்ற சாதியினர்க்கு ஆந்திர கர்நாடகவில் உள்ளது. முக்குலத்தோர்க்கு தாய் மொழியாக தமிழை தவிர வேறு தாய் மொழி இல்லை.

கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மதுரையை கைப்பற்றிய துலுக்கர்களுக்கு எதிராக (கி.பி.1311) பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் அவன் மாமன் தஞ்சையை ஆண்ட விக்கிரம பாண்டியன் அவனுக்கு துணையாக சாமந்த நாராயணத் தொண்டைமான்(கள்ளர் குல), வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் மற்றும் நாகமலையில் கள்ளர்களின் தாக்குதல் ( மதுரை மீனாட்சியம்மன் கோயில் 100 வருடம் பூட்டியிருந்தாலும் கோவிலுக்கு எந்த பாதகமும் ஏற்படாமல் இருக்க காரணம் அதை பாதுகாத்த முக்குலத்து வீரர்களே )

கி.பி.15 ஆம் நூற்றாண்டில் அந்த துலுக்கர்களை முழுவதும் அழித்து ஒழித்த விஜயநகர மன்னர் கம்பண உடையாருடன் சேர்ந்து வடக்காத்தான் பூலித்தேவர், 10 நாட்டு தன்னரசு கள்ளர்களும்.

கி.பி.16 ஆம் நூற்றாண்டில் கி.பி 1557 ல் சந்திரசேகர பாண்டியனை வென்று தமிழகத்தை அடிமையாக்க நினைத்த விஜயநகர அரசை எதிர்த்து கலகம் செய்த உடையான் சேதுபதி என்ற சடையக்கத் தேவர் மற்றும் 1544 ஆம் ஆண்டில் விஜநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள்,திருவாடானை பாண்டியர்கள்(அஞ்சுக்கொத்து மறவர்கள்), போகலூரை சார்ந்த ஜெயதுங்க தேவர்(சேதுபதி) கலகக்கொடி உயர்த்தினர் மற்றும் கள்ள நாட்டு அம்பலகாரர்கள். இதனால் 72 பாளையங்கள் பிரிக்கப்பட்டது அதில் பெரும்பாலானவை முக்குலத்தோர் மற்றும் நாயக்கர்கள் , இதனால் விஜயநகர ஆட்சி முடிவுற்றது.

கி.பி.17 ஆம் நூற்றண்டில் நாயக்க அரசர், சேதுபதியை ஒடுக்கும் பொருட்டு போர்ச்சுகீசியருடன் 1639 ஆகŠட் 13 அன்று ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் ஆள நினைத்த நாயக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் அவர்களை வென்றவரான கிழவன் சேதுபதி, அவரது தளபதி இரகுநாதராய தொண்டைமான் (புதுக்கோட்டையை தோற்றுவித்தவன்). மதத்தின் பேரால் போர்தூகீசியர்கள் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவதை வன்மையாக தடுத்து நிறுத்தியவர் இராமனாதபுர மன்னர் கிழவன் சேதுபதி. அதுமட்டுமல்ல நாயக்கர்களை அதிகாரத்தை மதுரை நகரத்துடன் தடுத்தவந்ததும் சேதுபதிகளே. மதுரையை முற்றுகையிட வந்த கன்னடர்களை மைசூர் வரை விரட்டியடித்த புகழ் பெற்ற மூக்கறுப்பு போர் நிகழ்தியவர் கிழவன் சேதுபதி, மூக்கறுப்பு போரின் வெற்றிக்கு முழுக்கரணமானவர் தளபதி வயிரவன் சேர்வை அவர்கள். தமிழர் மானத்தைக் காத்தவர்கள் மதுரை வாழ் கள்ளர்கள், அகம்படியர்கள்.

Kallar said...

கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களுக்கு எதிராக ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, காத்தப்பப் பூலித்தேவர், வாண்டாயத் தேவன், தன்னரசு கள்ளர் நாட்டு தேவர்கள்,

கி.பி.19 ஆம் நூற்றாண்டில் முத்துவடுகநாத தேவர், வீர மங்கை வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், பாகநேரிநாடு வாளுக்கு வேலி அம்பலம், கள்ளர் நாடு அம்பலகாரர்கள் , கருப்பசேர்வை, சின்ன மருது மகன் துரைச்சாமி . (அதுக்காக கிடைத்த பரிசு குற்ற பரம்பரை சட்டம் )

கி.பி.20 ஆம் நூற்றாண்டில்,இராமசாமி ஒன்றியார், இராமு தேவர் மற்றும் ஜானகி தேவர் ( நேதாஜி தேசிய படை) வெள்ளையனால் வாய்பூட்டு சட்டம் போட்டு அடக்க நினைத்த முத்துராமலிங்க தேவர் மற்றும் மூக்கையா தேவர். வாட்டாகுடி இரணியன் இன்னும் பல நூறு பேர்கள் , இவர்கள் யாருக்கும் அடங்காமல் வீரத்தோடு வாழ்ந்தவர்கள்.

இன்றும் சோழ மற்றும் பல்லவர்களுடைய முறையான நாடு அதில் கோட்டம், ஊர் நாடு, கரை, கிளை என்று வைத்து வாழும் ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே, எங்கும் ஓரு சத்திரியனும் யாருக்கும் அடங்கி வாழ்வானா?

இந்த 800 வருடங்களாக உங்கள் சாதியினர் எல்லோரும் எங்க இருந்திங்க, அய்யோ பாவம்;

எங்களுடைய ஓரு சாரார் ஆநிரை கவரும் கள்ளனா இருந்த எங்க வரலாற்றையே களவாட பார்க்கிறார்கள்.

கள்வெட்டுகளில் மன்னர்கள் பெயர்களுக்கு முன் உள்ள கள்ள, கள்வர் என்ற உயர்ந்த சொல்லுக்கு நீங்கள் வேற அர்த்தம் சொன்னாலும் இங்கள் இன பெருமை மாறாது.

முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல் சிலையெழுபது. இவர்கள் கருணாகரத் தொண்டைமான் (இவன் பல்லவன்) முதலாம் குலோத்துங்க சோழரின் (இவன் சாளுக்கியன் ) படைத்தளபதி வன்னியர் குலம் என்று சொல்கிறார்கள் அனால் அரசனும் வன்னியரா எப்படி?, வன்னிய புகழ்பாடும் சிலையெழுபது ஏன் மன்னனை விட்டு தளபதியை புகழ்கிறார், பல்லவர் வன்னியர் குலம் என்றால் சோழ சேர பாண்டிய மன்னர்கள் எப்படி வன்னியர்கள் ஆவர்.

அது சரி மற்ற சாதியினர்க்கு 100 அல்லது 150 பட்டம் இருக்கலாம் ஆனால் முக்குலத்தோர்க்கு 2000 பட்டம் உள்ளது
உடனே இது 400 வருடமாக இருக்கின்றன என்று கதை சொல்வது

Kallar said...

இச்செந்தமிழ் நிலத்தில் வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரியாறும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னரர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. கள்ளர்கள் தமிழர்களின் ஆதிகுடிகளான நாகர்களின் வழித்தோன்றல் தான் இந்த கள்ளர்கள். தமிழ்நாட்டில் சோழ, சேர, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு பிறகு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இருந்த தமிழக வரலாற்றிலும் மக்களாலும் அறியபட்ட சிறந்த தமிழ் மன்னர்கள் கிழவன் சேதுபதி , பூலித்தேவர், வேலுநாச்சியார், மருது பாண்டியர், வாளுக்கு வேலி அம்பலம்.

🌹 கள்ளர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு செய்திகள் :

🌹 தனி சிறப்பு :
1) எந்த இனத்திற்கும் எந்த சாதியினரும் இல்லாத இவர்களிடம் உள்ள பட்டங்கள்
2) இவர்களது தனிப்பட்ட வளரி ஆயுதமும்.
3) இவர்கள் வாழும் பகுதிகளின் நாடு என்ற அமைப்புகள்.
4) கள்ளர் வீரவிளையாட்டு 'சல்லிக்கட்டு'.
5) தமிழ் மொழி மீதுள்ள ஆர்வம் (நான்காம் தமிழ் சங்கம், கரந்தைச் தமிழ் சங்கம்).
6) நாட்டின் புற மண உட்பிரிவுகள் : வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன.
7) தலைவன்பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான்,
8) குலப்பட்டம்- தொண்டைமான், இராசாளி, நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர் மேலும் பல பட்டங்கள்.

இப்படி சிறப்புகளை பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா?

கள்ளர், கள்வர் சொற்கள் உயரிய பொருளைத் தருவதை நோக்க தலைவர், அரசர், கரியவர், உளம்கவர் பண்பாளர் என்று பொருள் கொள்ளலாம். இவ்வளவு சிறப்புப் பொருள் இருக்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பு பெற்ற ஒரு சமுதாயம் இழிபொருள் தரும் பெயரைத் தங்கள் குலப்பெயராக ஏற்பரா? ஏன்று சிந்தித்தால் அவர்களுக்கும் கள்ளர் என்ற சொல் மேற்கண்ட உயர் பொருளிலேயே வழங்கி இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் எந்த தொல்குடியை சேர்ந்தவர்கள் என்பதைக் காண்போம்.
கள்ளர்களுக்கு எம்முறையில் இப்பெயர் வழங்கப்படுகிறது என்று சிறிது காண்போம்.

“கள்வனென் கிளவி கரியோனென்ப” – திவாகரம்

“கடகரிப்பெயரும், கருநிறமகனும், கற்க்கடக விராசியும்
ஞெண்டும் கள்வனென்” – பிங்களந்தை

எனவே கள்வன் எனும் சொல் கருநிறம் உடையோன் என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. ஆரியரின் இருக்குவேத மந்திரங்கள் தமிழரைக் கரியோர், பகைவர் என்று கூறுகின்றன. இந்திரன் கரியோன் எனப் பெயர் பெற்றவனாவான் அது பற்றியே கள்ளர்கள் தங்களை இந்திர குலத்தார் என்று கூறி வருகின்றனர். சோழர்களை கருநிறம் பற்றியே மால் என்று அழைக்கின்றனர்.

கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.

"உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்"

"திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார், கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்"

மேலும் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்) " தொண்டைமான் கள்ளர் என்பதற்கு ஆதாரம் கீழே காணலாம் "

Kallar said...

தமிழ் நாடு அரசுகள்
================
பாண்டிய அரசு (தமிழ்) : கி.மு.600–கி.பி.1550 (2050 வருடம்)

சோழ அரசு (தமிழ்) : கி.மு.300–கி.பி.1279 (1579 வருடம்)

சேர அரசு (தமிழ்) : கி.மு. 300 –கி.பி.1124 (1424 வருடம்)

பல்லவ அரசு (தமிழ், தெலுங்கு) : கி.பி.275–கி.பி.897 ( 622 வருடம்)

களப்பிர அரசு (பாளி) : கி.பி 300- கி.பி. 700 (400 வருடம்)

முத்தரையர் அரசு (தமிழ் ) : கி.பி.610 - கி.பி.851 (241 வருடம் )

யாழ்ப்பாண சேது அரசு ( தமிழ் ) : கி.பி.1215–கி.பி.1624 (409 வருடம்)

சம்புவரைய அரசு (தமிழ் ) : கி.பி.1236- கி.பி.1375 (139 வருடம்)

மதுரை சுல்தான் (உருது): கி.பி.1335–கி.பி. 1378 (43 வருடம்)

விஜயநகர அரசு (தெலுங்கு,கன்னடம்) : கி.பி.1336–கி.பி.1646 (310 வருடம்)

பூழி நாடு அரசு (தமிழ் மறவர்) : கி.பி.1378 -கி.பி.1767 (389 வருடம்)

மதுரை நாயக்கர் அரசு (தெலுங்கு): கி.பி.1529 - கி.பி.1736 (207 வருடம்)

தஞ்சாவூர் நாயக்கர்கள் (தெலுங்கு): கி.பி.1532–கி.பி.1673 (141 வருடம்)

சேதுபதி அரசு (தமிழ் ) : கி.பி.1590-கி.பி.1923 (333 வருடம்)

பிரெஞ்சு குடியரசு (பிரெஞ்சு): கி.பி.1673–கி.பி. 1954 (281 வருடம்)

மராட்டிய அரசு (மராட்டி) : கி.பி.1674–கி.பி.1855 (181 வருடம்)

கள்ளர் குல தொண்டைமான் அரசு (தமிழ் ) : கி.பி.1686 - கி.பி.1948 (262 வருடம்)

வெள்ளையர்கள் (ஆங்கில) : கி.பி.1693-கி.பி.1947 (254 வருடம்)


இதில் சோழ சேர பாண்டிய மன்னர்கள் பிறகு தமிழகத்தில் வீரத்தோடு வாழ்ந்தவர்கள் முக்குலத்தோர் மட்டுமே.நீங்கள் 800 வருடங்கள் முன் உள்ள கதைகளை விடுங்கள் அதன் பிறகு இப்போது சொல்ல வரலாறு ஏதாவது இருக்கிறதா.

Post a Comment

 
Design by JP