Wednesday, December 28, 2011

NHM எழுதியை உங்கள் கணினியில் நிறுவுவது எப்படி? தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

0


ஒருங்குறித் தமிழில் (unicode tamil) எழுதுவதற்குப் பல மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று NHM எழுதி.   http://software.nhm.in/products/writer இந்த இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ( இந்த மென்பொருள் விண்டோஸ் அடிப்படையிலான இயங்குதளத்திற்கு மாத்திரம் XP, Vista, Windows 7..)
படம் 1 
பின்னர் நிறுவப்படவேண்டிய NHMWriterSetup1511.exe இல் சொடுக்கி நிறுவத்தொடங்குங்கள். மேலதிக விளக்கத்திற்காக கீழுள்ள படங்களைப் பார்க்கவும்.
நிறுவல் பூர்த்திசெய்யப்பட்டதும் Task bar ல்( மணி போன்ற சிறிய படம்), Desktopல் NHM Writter ற்கான ஐகனை காண்பீர்கள்
பின்னர் உங்களுக்கு பிடித்த/ பழக்கமான தமிழ் தட்டச்சு செய்யும் வசதியை  Alt+0 அல்லது Alt+1 அல்லது Alt+2 அல்லது Alt+3 அல்லது Alt+4 அல்லது Alt+5 ஐ அழுத்தி தெரிவு செய்தபின் எந்த ஒரு இடத்திலும் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம். ந்கல் செய்து ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை.
நிறுவிய பின்ன ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறித் தட்டச்சு செய்யலாம். நகலெடுத்தல் , ஒட்டுதல் (copy , paste ) செய்ய வேண்டிய அவசியமில்லை. இணைய அரட்டை செய்யும் போது தமிழ், ஆங்கிலத்தில் மாறி மாறி விரைவாக தட்டச்சு செய்ய முடியும். அத்துடன் இது பல ( applications : eg : MS office, notepad, IE explorers and so on) பிரயோகங்களுடன் ஒத்திசைந்து தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது.

மேலதிக உதவிகள்
 ) ஒலிப்பு முறையை பயன்படுத்துவதாயின் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்
உயிரெழுத்துக்கள்
 அ = a, ஆ = aa அல்லது A, இ = i , ஈ = ii அல்லது I உ = u , ஊ = uu அல்லது U
எ = e , ஏ = ee அல்லது E , ஐ = ai, ஒ = o , ஓ = oo அல்லது O , ஔ = au
ஆய்த எழுத்து
ஃ = q 
மெய் எழுத்துக்கள்
க் = k அல்லது g, ங் = ng, ச் = s அல்லது c , ஞ் = nj அல்லது X , ட் = d அல்லது t , ண் = N,
த் = th, ந் = w , ப் = p அல்லது b, ம் = m , ய் = y , ர் = r ,
 ல் = l , வ் = v, ழ் = z , ள் = L , ற் = R, ன் = n
 விசேட எழுத்துக்கள் ( வட மொழி எழுத்துக்கள் -மெய்)
 ஜ் = j, ஷ் = Z அல்லது sh, ஸ் = S, ஹ் = ன் , க்ஷ் = ksh
 விசேட எழுத்துக்கள்
க்ஷ் = ksh
ஸ்ரீ = sr
ந்த் = nth உயிர்மெய் எழுத்துக்கள்
க = க்+அ = ka , கா = (க்+ஆ) =kA அல்லது kaa , கி = (க்+இ) = ki , கீ = (க்+ஈ) = kii அல்லது kI , கு = (க்+உ) = ku கூ =
(க்+ஊ) = kU அல்லது kuu,
கெ = க்+எ = ke , கே = (க்+ஏ) = kE அல்லது kee, கை = க்+ ஐ = kai, கொ = (க்+ஒ) = ko, கோ = க்+ஓ = koo அல்லது kO,
கௌ = (க்+ஔ) = kau

உதாரணங்கள் சில..
அம்மா - ammaa அல்லது ammA
வணக்கம் - vaNakkam
நன்றி - wanRi
2)  பாமினி விசைப்பலகை அமைப்பை பயன்படுத்துவதாயின் 
3) தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை பயன்படுத்துவதாயின் 

(E-கலப்பையை பயன்படுத்துவதற்கான வழிமுறையை தெரிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள் https://www.facebook.com/note.php?note_id=127514014709  . அல்லதுhttps://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472&type=1 )

(உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகம் செய்து எங்கும் தமிழின் நறுமணம் வீசச் செய்வோம்)
நன்றி

0 comments:

Post a Comment

 
Design by JP