Thursday, August 11, 2011

தமிழ்த் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் உ.வே. சா. நினைவு இல்லத்தில் தமிழாராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் - தமிழ் ஆர்வலர்கள்

0

 உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 



28, 1942, உத்தமதானபுரம் வேங்கடசுப்
பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தா - 
திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான் ஒன்றியத்திற்குள்பட்ட உத்தமதானபுரத்தில் உவேசா பிறந்த இல்லம் உள்ளது. அழியும் நிலையிலிருந்த தமிழ் ஓலைச் சுவடிகளை தேடிப் படியெடுத்து, முறைப்படுத்தி பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,அகநானூறு, புறனானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களையும்,சீவக சிந்தாமணி உள்ளிட்ட காப்பியங்களையும் அச்சிட்டுப் பதிப்பித்து, தமிழைக் காத்தவர் உ.வே. சாமிநாதய்யர். மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்ச் செம்மொழி உயராய்வு மையம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட குழுவினரால் உவேசா பிறந்த நாள் விழா, அவரது நினைவு தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவரது நினைவைப் போற்றும் வகையில், அவர் பிறந்த இடத்தை நினைவு இல்லமாக அறிவித்து, புதிய கட்டடம் அமைத்துத் தர முந்தைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர், திமுக ஆட்சியில் கட்டுமானப் பணிகள் தொடங்கி,தரைத் தளம், முதல் தளத்துடன் கூடிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, தரைத் தளத்தில் உவேசாவின் மார்பளவு உலோகச் சிலை, தமிழின் அரிய ஓலைச் சுவடிகள் உள்ளிட்டவையும், முதல் தளத்தில் தமிழின் அரிய வகை நூல்கள் அடங்கிய நூலகத்தை அமைக்கும் வகையிலும் கட்டடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள், அதிகாரிகளிடம் உவேசா நினைவு இல்லத்தில் தமிழில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் தமிழாராய்ச்சி மையம் தொடங்கப்பட வேண்டும் என பொதுமக்களும், தமிழார்வலர்களும் வலியுறுத்தினர். அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், பாபநாசம் புதிய பேருந்து நிலையத்திற்கு உவேசா பெயரைச் சூட்ட வேண்டும். பாபநாசம் பகுதியில் உவேசா பெயர் தாங்கிய நினைவு அலங்கார வளைவை அமைக்க வேண்டும். நினைவில்லத்திற்கு வந்து செல்ல வசதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தையும், திருவாரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட சாலை வசதி, பேருந்து வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட கடந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றித் தரவில்லை.
 எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை தற்போதைய அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.



0 comments:

Post a Comment

 
Design by JP